கோவில்பட்டியில் வைரமுத்துவை கண்டித்து ஆர்ப்பாட்டம்– சாலைமறியல் இந்து அமைப்புகள் நடத்தின


கோவில்பட்டியில் வைரமுத்துவை கண்டித்து  ஆர்ப்பாட்டம்– சாலைமறியல் இந்து அமைப்புகள் நடத்தின
x
தினத்தந்தி 13 Jan 2018 2:30 AM IST (Updated: 12 Jan 2018 6:42 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டாள் தாயார் குறித்து அவதூறாக விமர்சனம் செய்ததாக வைரமுத்துவை கண்டித்து, இந்து அமைப்புகள் சார்பில், கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் செய்து, சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

ஆண்டாள் தாயார் குறித்து அவதூறாக விமர்சனம் செய்ததாக வைரமுத்துவை கண்டித்து, இந்து அமைப்புகள் சார்பில், கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் செய்து, சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

ஆண்டாள் தாயார் குறித்து அவதூறாக விமர்சனம் செய்ததாக வைரமுத்துவை கண்டித்து, ராமானுசன் தொண்டர் குழாம், ஆளவந்தார் அறக்கட்டளை, பாரதீய கிசான் சங்கம், விசுவ இந்து பரிசத் ஆகிய இந்து அமைப்புகள் சார்பில், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாரதீய கிசான் சங்க மாவட்ட செயலாளர் சேசு நாயக்கர் தலைமை தாங்கினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடம் 24–வது பட்டம் சடகோப ராமானுஜ ஜீயர், பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் கார்த்திக், ராமானுசன் தொண்டர் குழாம் கோவிந்தராஜ அய்யங்கார், பாரதீய கிசான் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ரங்கநாயகலு, மாவட்ட துணை தலைவர் பரமேசுவரன்,

ரமண சாஸ்திரி, மாரியப்பன், தொழில் அதிபர் கோவிந்தராஜ், கனகராஜ், முன்னாள் அறங்காவலர் திருப்பதி ராஜா, துரைராஜ், இந்து முன்னணி புருஷோத்தமன், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் நாராயணன், தொகுதி செயலாளர் பாலு, ரங்கராஜன், நகர இளைஞர் அணி தலைவர் காளிதாஸ் உள்பட திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

சாலைமறியல்

பின்னர் அவர்கள், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்க ஊர்வலமாக புறப்பட தயாரானார்கள். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். எனவே, அவர்கள் அங்கு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேரை மட்டும் கோரிக்கை மனு வழங்க போலீசார் அனுப்பி வைத்தனர். அவர்கள், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டியனிடம் கோரிக்கை மனு வழங்கினர். பின்னர் அவர்கள், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜிடம் கோரிக்கை மனு வழங்கினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.


Next Story