கவர்னர் கிரண்பெடியுடன், ரங்கசாமி சந்திப்பு


கவர்னர் கிரண்பெடியுடன், ரங்கசாமி சந்திப்பு
x
தினத்தந்தி 13 Jan 2018 5:00 AM IST (Updated: 13 Jan 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

புதுவை கவர்னர் கிரண்பெடியை, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி நேற்று சந்தித்து பேசினார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் கடந்த தீபாவளி பண்டிகையின்போது அனைத்து ரே‌ஷன்கார்டுகளுக்கும் இலவச சர்க்கரை வழங்குவது தொடர்பான கோப்புக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்க மறுத்து அதை திருப்பி அனுப்பினார். அதனால் இலவச சர்க்கரை மற்றும் இலவச துணியும் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கு என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு அவர் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் ராதாகிருஷ்ணன் எம்.பி. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உடனிருந்தனர். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடம் நடந்தது. அதன் பின்னர் ரங்கசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த சந்திப்பு குறித்து ரங்கசாமியிடம் கேட்ட போது, ‘ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கவர்னர் கிரண்பெடியை மரியாதையின் நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்’ என்றார். புதுவை அரசின் நிலை குறித்து கேட்ட போது, ‘நான் இது தொடர்பாக பொங்கல் பண்டிகைக்கு பின்னர் பதில் அளிப்பேன்’ என்றார்.


Next Story