மும்பையில் உலகிலேயே மிகப்பெரிய பூங்கா அமைக்கப்படும்


மும்பையில் உலகிலேயே மிகப்பெரிய பூங்கா அமைக்கப்படும்
x
தினத்தந்தி 13 Jan 2018 4:23 AM IST (Updated: 13 Jan 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

‘‘துறைமுக பொறுப்பு கழகம் சார்பில், மும்பையில் உலகிலேயே மிகப்பெரிய பூங்கா அமைக்கப்படும்’’ என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.

மும்பை,

மும்பையில் ரூ.300 கோடி மதிப்பில் சர்வதேச கப்பல் முனையம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு, திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உடனிருந்தார்.

நிகழ்ச்சியில், நிதின் கட்காரி பேசுகையில், ‘‘மத்திய மும்பை பகுதியில் 350 ஹெக்டேர் நிலப்பரப்பை பண்படுத்தி, அங்கு துறைமுக பொறுப்பு கழகம் சார்பில் உலகிலேயே மிகப்பெரிய பூங்கா அமைக்கப்படும்’’ என்றார்.

இத்திட்டம் ஏற்கனவே நகர வளர்ச்சி திட்ட பட்டியலில் இருப்பதாக கூறிய அவர், இதற்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது சிறப்பு உரிமையை பயன்படுத்தி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மும்பையில் 300 ஏக்கருக்கு மேல் அமையப்பெறும் இந்த பூங்கா, லண்டனில் உள்ள ஹைடு பார்க்கை விட மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று துறைமுக பொறுப்பு கழக தலைவர் சஞ்சய் பாட்டீயா நிருபர்களிடம் கூறினார்.


Next Story