கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு


கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 13 Jan 2018 5:14 AM IST (Updated: 13 Jan 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில் கடந்த மார்ச் மாதத்தில் வாட்டி எடுத்த கோடைவெயில் காரணமாக ஏரி வறண்டது. இதனால் சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த நிலையில் கண்டலேறு அணை நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.

இதை தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை உயர்அதிகாரிகள் கடந்த மாதம் ஆந்திராவுக்கு சென்று அந்த மாநில முதல்–மந்திரி சந்திரபாபுநாயுடுவை சந்தித்து கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் கடந்த டிசம்பர் மாதம் 27–ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் கடந்த 2–ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. கண்டலேறு அணையில் முதலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 150 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதாவது வினாடிக்கு 2 ஆயிரத்து 150 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்கு 275 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

பூண்டி ஏரிக்கு 263 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். ந்றறு காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 26.55 அடியாக பதிவானது. 1,096 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.



Next Story