13 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு!


13 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு!
x
தினத்தந்தி 13 Jan 2018 12:29 PM IST (Updated: 13 Jan 2018 12:29 PM IST)
t-max-icont-min-icon

சீனாவில் 13 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சீனாவில் ஜியாங்சி மாகாணத்தில் அந்த முட்டைகளை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அம்மாகாணத்தில் உள்ள கான்ஸோ பகுதியில் புதிய பள்ளிக்கூடம் ஒன்றின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அந்த முட்டைகளைக் கண்டு பிடித்துள்ளனர்.

இதுவரை அப்பகுதியில் இருந்து 30 டைனோசர் முட்டைகள் மீட்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் டைனோசர்கள் மிக அதிகமாக வாழ்ந்து வந்துள்ளது நிரூபணமாகியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

13 கோடி ஆண்டுகள் பழமையான அந்த முட்டைகள் கட்டுமான ஊழியர்களின் எந்திரங்களால் பாதிக்கப்படாமல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.

தடிமனான ஓட்டுடன் பாறை போன்ற பொருள் இருப்பதை அறிந்த கட்டுமான ஊழியர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்குத் தகவல் அளித்ததுடன், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து அந்தக் கட்டுமானப் பகுதிக்கு விரைந்துவந்த அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார், அப்பகுதியில் இருந்து 30 முட்டைகள் வரை இதுவரை மீட்டுள்ளனர்.

தற்போது மீட்கப்பட்டுள்ள முட்டைகளை அடுத்தகட்ட ஆய்வுக்கு என தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வருகின்றனர்.

பல கோடி வருடங்களுக்கு முன் இடப்பட்ட முட்டைகள்! 

Next Story