கொழுப்பைக் குறைக்க உதவும் பயிற்சிகள்


கொழுப்பைக் குறைக்க உதவும் பயிற்சிகள்
x
தினத்தந்தி 13 Jan 2018 12:50 PM IST (Updated: 13 Jan 2018 12:50 PM IST)
t-max-icont-min-icon

உடலில் கெட்ட கொழுப்பு சேருவது ஆபத்து. அந்த ஆபத்தைக் குறைக்க ‘கார்டியோ’ பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன.

திக எடை மற்றும் கொலஸ்டிரால் பிரச்சினை உள்ளவர்கள், கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பெற விரும்புபவர்கள் என்று அனைத்து வயதினரும் கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

அவை பற்றி...

முதலில் மல்லாந்து படுத்து கொண்டு, இரண்டு கால்களையும் மடக்கி, கைகளை பக்கவாட்டில் வைத்து, தலை மற்றும் தோள்பட்டையில் அழுத்தம் கொடுத்து இடுப்பு, கால்கள், முதுகு ஆகிய பகுதிகளை மட்டும் உயர்த்திய நிலையில் ஒரு நிமிடம் வரை இருக்க வேண்டும்.

‘பெல்விக் லிப்டிங்’ என்ற இந்தப் பயிற்சியால், வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு குறையும், தோள்பட்டை வலுப்பெறும், கால் தசைகள் இறுகும், முதுகுத்தண்டு நேராகும், உடல் வலுவாகும்.

அடுத்ததாக, முழங்கை மற்றும் கால் விரல்களை ஊன்றி, முட்டி போடும் நிலையில், இடது முட்டியை மடக்கி, உடலை நேராக வைத்துக் கொண்டு அதேநேரத்தில் இரண்டு கால்களையும் பின்புறமாக நீட்டி, முழு உடலின் எடையையும் கை மற்றும் கால்கள் தாங்குவதுபோல ஊன்றிய நிலையில் ஒரு நிமிடம் வரை இருக்க வேண்டும்.

‘ஹரிசான்டல் பிளாங்’ எனப்படும் இப் பயிற்சியால் முதுகுத் தண்டுவடம் வலிமையாகும். இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பு குறையும். கைகால்கள் வலுப்பெறும். உடலின் சமநிலை மேம்படும்.

அறுவைசிகிச்சை செய்தவர்களும், கடும் உடல் காயம் அடைந்தவர்களும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த கார்டியோ பயிற்சிகளை செய்யக்கூடாது. 

Next Story