தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்


தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2018 2:30 AM IST (Updated: 13 Jan 2018 7:27 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் பொங்கல் விழா நடந்தது. ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள், மாணவிகள் பொங்கலிட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். துணை முதல்வர் வாசுகி முன்னிலை வகித்தார். விழாவையொட்டி மாணவ–மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் மாணவ–மாணவிகள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளிக்கூடத்தில் பொங்கல் விழா நடந்தது. ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் பொங்கலிட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். மாணவ–மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடந்த யோகாசன போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர் சந்தீபனுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது. பள்ளி செயலாளர் மாணிக்கவாசகம், பொருளாளர் ரத்தினராஜா, பள்ளி முதல்வர் தேன்மொழி மற்றும் ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி கே.ஆர். கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கல்லூரியின் அனைத்து துறை சார்பிலும் பொங்கலிட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். சிறப்பாக பொங்கலிட்ட துறையினருக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் கண்ணப்பன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி– இளையரசனேந்தல் ரோடு முதியோர் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. உதவி கலெக்டர் அனிதா தலைமை தாங்கி, பொங்கலிட்டார். பின்னர் அவர் முதியவர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள், கரும்புகளை வழங்கினார். ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன்ராஜா, மைக்ரோ பாய்ண்ட் ஐ.டி.ஐ. முதல்வர் ஆம்ஸ்ட்ராங், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை சண்முககனி, முதியோர் இல்ல காப்பாளர் ராமலட்சுமி, அறக்கட்டளை பொறுப்பாளர்கள் சேர்மராஜன், ராமசுப்பிரமணியன், பானுமதி, விஜயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எட்டயபுரம்–ஆறுமுகநேரி

எட்டயபுரம் சுப்பாராஜ் நினைவு கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் பொங்கலிட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ–மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலாளர் ராமச்சந்திரன், கல்லூரி தாளாளர் தீபா, கல்லூரி முதல்வர் ராஜா மற்றும் பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஆறுமுகநேரியை அடுத்த சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பொங்கல் விழா நடந்தது. ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் பொங்கலிட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். பொங்கல் விழா குறித்த பேச்சு போட்டி, பட்டிமன்றம் நடந்தது. மாணவ–மாணவிகள், ஆசிரியர்கள் பாரம்பரிய பட்டு வேட்டி, சட்டை, சேலை அணிந்து வந்தனர். பள்ளி முதல்வர் சண்முகானந்தன், துணை முதல்வர்கள் செல்வராஜ், வனிதா ராயர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம்–சாத்தான்குளம்

ஸ்ரீவைகுண்டம் அருகே மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவன அலுவலகத்தில் பொங்கல் விழா நடந்தது. தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் தலைமை தாங்கி, பொங்கலிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பின்னர் அவர், ஏழை பெண்களுக்கு இலவச சேலைகளை வழங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வ பிரசாத், தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன், பொறுப்பாளர் ராமச்சந்திரன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம் அருகே நொச்சிக்குளம் புனித மிக்கேல் உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் பொங்கலிட்டனர். கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ–மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் ஜான் போஸ்கோ, தலைமை ஆசிரியர் சேவியர் இருதயராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம்–கயத்தாறு

விளாத்திகுளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் பாலசிங் தலைமை தாங்கி, பொங்கலிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். வேளாண்மை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜ், வேளாண்மை அலுவலர் சுனில் கவுசிக், உதவி வேளாண்மை அலுவலர்கள் முத்துசாமி, அருள்பிரகாஷ், சுதாகர், கவுதமி, சரண்யா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தாசில்தார் முருகானந்தம் தலைமை தாங்கி, பொங்கலிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். துணை தாசில்தார்கள் மாடசாமி, அய்யப்பன், யூனியன் ஆணையாளர்கள் நாகராஜன், தங்கவேல், வருவாய் ஆய்வாளர் முத்துகண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story