மோட்டார் சைக்கிள்- மொபட் மோதல்; என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள்- மொபட் மோதல்; என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 14 Jan 2018 4:00 AM IST (Updated: 13 Jan 2018 10:50 PM IST)
t-max-icont-min-icon

அச்சரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்- மொபட் மோதிய விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

அச்சரப்பாக்கம்,

சேலத்தை சேர்ந்தவர் அப்துல் ரசாக் (வயது 25). சென்னையில் கார் உதிரிபாகங்கள் செய்யும் தொழிற்சாலையில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் சபரிமுத்து (25). இவரும் சேலத்தை சேர்ந்தவர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அப்துல் ரசாக் ஓட்டி சென்றார். அச்சரப்பாக்கத்தை அடுத்த கடமலைபுத்தூர் பகுதியில் செல்லும்போது கடமலைபுத்தூரை சேர்ந்த பக்தவச்சலம் (55) என்பவர் மொபட்டில் சாலையை கடக்க முயன்றார். இதில் அப்துல் ரசாக் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பக்தவச்சலத்தின் மொபட் மீது மோதியது.

இதில் அப்துல் ரசாக், சபரிமுத்து, பக்தவச்சலம் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அப்துல் ரசாக், பக்தவச்சலம் இருவரும் இறந்தனர்.

இது குறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story