ஒரத்தூர், ஜி.சி.எஸ்.கண்டிகை ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்


ஒரத்தூர், ஜி.சி.எஸ்.கண்டிகை ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 14 Jan 2018 4:45 AM IST (Updated: 13 Jan 2018 11:12 PM IST)
t-max-icont-min-icon

ஒரத்தூர், ஜி.சி.எஸ்.கண்டிகை, பெருமுடிவாக்கம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடந்தது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த ஒரத்தூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு துணை தாசில்தார் (தேர்தல்பிரிவு) எஸ்.ராஜன் தலைமை தாங்கினார். ஒரத்தூர் முன்னாள் அ.தி.மு.க ஊராட்சி மன்றத்தலைவர் கற்பகம் சுந்தர், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சுந்தர், வனக்குழு தலைவர் என்.டி.எஸ்.சுபாஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மனுக்களை துணை தாசில்தாரிடம் பொதுமக்கள் அளித்தனர். இதில் சில மனுக்கள் மீது துணை தாசில்தார் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதில் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் துளசி, படப்பை வருவாய் ஆய்வாளர் ஹரி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் தினேஷ், ஒரத்தூர் கிராம நிர்வாக அதிகாரி எம்.சீனிவாசன், அம்மணபாக்கம் கிராம நிர்வாக அதிகாரி டில்லி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஜி.சி.எஸ்.கண்டிகை ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு பள்ளிப்பட்டு தனி தாசில்தார் லட்சுமணன் தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, திருமண உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், சாதிசான்றிதழ், ஸ்மார்ட் கார்டு, வங்கி கடன், அரசு நலத்திட்ட உதவிகள் உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

முகாமிற்கு மண்டல துணை தாசில்தார் மலர்விழி முன்னிலை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் வெண்ணிலா, வருவாய் ஆய்வாளர் மகேந்திரன், கிராம நிர்வாக அதிகாரி இமாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள பெருமுடிவாக்கம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு ஊத்துக்கோட்டை தனி தாசில்தார் லதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுகொண்டார். ,தலைமையிடத்து எழுத்தர் ரவி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேசன், கிராம நிர்வாக அதிகாரிகள் பானு, லட்சுமி, சுயம்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 19 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து தனி தாசில்தார் லதா பெற்று கொண்டார். இதில், 3 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 11 மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடனடி தீர்வு காணப்பட்ட 3 மனுக்களுக்கு அதற்கான ஆணையை ஊத்துக்கோட்டை தனி தாசில்தார் லதா பயனாளிகளுக்கு வழங்கி பேசினார்.

முன்னதாக அனைவரையும் கிராம உதவியாளர்கள் பாஸ்கர், சரவணன், மோகன், ராமு ஆகியோர் வரவேற்றனர். முடிவில், தேவேந்திரன் நன்றி கூறினார்.

Next Story