காளையார்கோவிலில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
காளையார்கோவிலில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காளையார்கோவில்,
காளையார்கோவில் ஊத்துப்பட்டி பகுதியில் சுமார் 400 வீடுகள் உள்ளன.
இதில் மொத்தம் 600-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைக்கப்பட்ட தெருக் குழாய் மூலம் இப்பகுதி மக்களுக்கு தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லையாம்.
இதனால் இப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த காளையார்கோவில் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புத்துரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் இப்பகுதியில் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய புதிதாக மின்மோட்டார் பொருத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story