நீலகிரி மாவட்ட காவல்துறை மூலம் 72 கிராமங்கள் தத்தெடுப்பு, போலீஸ் சூப்பிரண்டு தகவல்
நீலகிரி மாவட்ட காவல்துறை மூலம் 72 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன என்று போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா கூறினார்.
பந்தலூர்,
பந்தலூர் அருகே உள்ள பிதிர்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நீலகிரி மாவட்ட காவல்துறையும், இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் நீலகிரி ஆதிவாசி நலச்சங்கம் ஆகியவை இணைந்து ஆதிவாசி மக்களுக்கு இலவச மருத்துவ முகாமை நடத்தின. முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தொடங்கி வைத்தார். தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல் வரவேற்றார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், உஷா, ஞானரவி, சப்- இன்ஸ்பெக்டர் இளவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் டாக்டர்கள் கருப்புசாமி, பிரதிஷா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பரிசோதித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்தனர். இதைத்தொடர்ந்து செருகுன்னு ஆதிவாசி கிராமத்தை பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தத்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது-
நீலகிரி மாவட்ட காவல்துறை மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் 72 ஆதிவாசி கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. இங்கு வாழும் மக்களுக்கு அவ்வப்போது இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இதேபோல் இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது.
செருகுன்னு கிராமமும் தத்தெடுக்கப்பட்டுள்ளதால் காவல்துறை மூலம் பல்வேறு உதவிகள் செய்யப்படும். எனவே ஆதிவாசி மக்கள் தங்களது குழந்தைகளை கண்டிப்பாக பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும். கல்வி அறிவு பெற்றால் மட்டுமே எதிர்காலத்தில் குழந்தைகள் முன்னேற்ற பெற முடியும். இதன் மூலம் சமுதாயமும் வளர்ச்சி பெறும். கஞ்சா, போதை தரும் புகையிலை பொருட்களை பயன்படுத்துதல், மது அருந்துதல் உள்ளிட்ட பழக்கவழக்கங்களை ஆதிவாசி மக்கள் கைவிட வேண்டும். இத்தகைய பழக்கத்தினால் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
மேலும் ஆதிவாசி கிராமங் களுக்கு சாலை, தெருவிளக்கு, நடைபாதை உள்பட அடிப்படை வசதிகள் அந்தந்த துறை சார்பில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் குழந்தைகளுக்கு பாதிப்பு அல்லது பிரச்சினை ஏற்பட்டால் ஆதிவாசி மக்கள் காவல்துறை உதவியை நாடலாம். அவர்களுக்கு போலீசார் எந்த நேரத்திலும் உதவி செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story