தங்கையை கேலி செய்ததை கண்டித்த கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து, 2 வாலிபர்கள் கைது
தங்கையை கேலி செய்ததை கண்டித்த கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை,
கோவையை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோஜ்குமாரின் தங்கை தனியாக சென்ற போது வாலிபர்கள் அவரை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த மனோஜ்குமார், தனது தங்கையை கேலி செய்த வாலிபர்களை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் மனோஜ்குமார் பொருட்கள் வாங்குவதற்காக சவுரிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கியது.
பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனோஜ்குமாரை சரமாரியாக குத்தினர். மேலும் ஹெல்மெட்டாலும் தலையில் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு, கோவை உடையாம்பாளையம் அன்னமார் கோவில் தெருவை சேர்ந்த நவீன்குமார் (23), சவுரிபாளையம் உடையாம்பாளையம் ரோட்டை சேர்ந்த ராமச்சந்திரன் (20) ஆகிய 2 பேரை கைதுசெய்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய பாலாஜி, சிவசக்தி, கார்த்தி, செல்வராஜ் உள்பட 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story