கோவையில் கைவரிசை காட்டிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கோவையில் கைவரிசை காட்டிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில், கடந்த மாதம் 9-ந்தேதி இரவு தனியார் வங்கிகளின் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதில், ஒரு ஏ.டி.எம். மையத்தில் ரூ.3 லட்சத்து 35 ஆயிரமும், மற்றொரு ஏ.டி.எம். மையத்தில் ரூ.26 லட்சத்து 70 ஆயிரமும் கொள்ளையடிக்கப்பட்டது. அவினாசி ரோட்டில் உள்ள மற்றொரு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றது.
கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இருக்கும் பகுதியை வெட்டி எடுத்தும், கண்காணிப்பு கேமராக்களில் கருப்பு நிற ஸ்பிரே பெயிண்ட் தெளித்தும் இந்த கொள்ளை நடைபெற்றது. அலாரத்தின் வயர்களும் துண்டிக்கப்பட்டு இருந்தன.
இது குறித்து போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. நாமக்கல் பகுதியில் ஏ.டி.எம். கொள்ளையர்கள் 8 பேர் பிடிபட்டனர்.
விசாரணையில், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த இவர்கள் நாடு முழுவதும் பல ஏ.டி.எம். மையங்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்து கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது.
கைதானவர்கள் விவரம் வருமாறு:-
1.ஜுல்பிஹீர், 2. முஸ்தாக், 3.மோசம்கான் 4.சுபேர், 5.அமித்குமார், 6. மற்றொரு சுபேர், 7.முபாரக், 8.அமீன் ஆகியோர் ஆவார்கள்.
இவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய வெல்டிங் எந்திரங்கள், கார், ஒரு லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
வடமாநில கொள்ளையர்கள் மீது பல்வேறு மாநிலங்களில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையடித்தது தொடர்பான ஏராளமான வழக்குகள் உள்ளன. இதனால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களிடம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
கொள்ளையர்களுக்கு இந்தி, உருது மொழிகள் மட்டும் தெரியும் என்பதால், குற்றப்பத்திரிகை நகல், இந்தி மொழியில் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story