திருப்பூர் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
முத்தூர்,
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். ஈரோடு எஸ்.செல்வக்குமாரசின்னையன் எம்.பி., முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எஸ்.சாந்தி வரவேற்று பேசினார். விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பொன்விழா நுழைவு வாயில் மற்றும் சீரணி அரங்கம், பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசிய தாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் முன்னேற்றம் அடைய தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கட்டணமில்லாமல் படிக்க ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது அமைக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி மையங்களில் 3 ஆயிரத்து 700 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி மையம் தொடங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மத்திய அரசு கொண்டு வரும் ‘நீட்’ உள்பட பல்வேறு தேர்வுகளை தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மிக எளிதில் எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு 100 ‘நீட்’ பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு முதல் ஆரம்பகல்வி, உயர்நிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 3 வகையான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு 6-ம் வகுப்பில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்குவதற்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கற்றல் குளறுபடியுள்ள 10 சதவீத மாணவர்களுக்கும் கல்வி நன்கு மனதில் பதியும் வண்ணம் கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 10 ஆயிரம் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு கற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி இந்த ஆண்டு முதல் அளிக்கப்படும். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பிளஸ்-2 முடித்தவுடன் வேலை வாய்ப்பு பெற அரசு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் விழாவில் முன்னாள் அமைச்சர் துரைராமசாமி பள்ளிக்கு இலவசமாக 5¼ ஏக்கர் நிலம் வழங்கிய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் எஸ்.நடராஜை பாராட்டி கல்வெட்டை திறந்து வைத்தார். முடிவில் கடந்த கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், பாடத்தில் 100 சதவீதம் வழங்கிய ஆசிரிய-ஆசிரியைகளுக் கும், விளையாட்டு, கலை இலக்கிய போட்டிகளில் மாநில, மாவட்ட அளவில் சாதனை புரிந்த மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் என்.எஸ்.என்.நடராஜ், செல்விமுருகேசன், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னாராமசாமி, மாவட்ட கல்வி அலுவலர் சித்ரா, பேரூராட்சி முன்னாள் தலைவர் எம்.செல்வநாயகிமுத்துக்குமார், ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் முருகவேல் என்கிற ஏ.எஸ்.ராமலிங்கம், சிவ்பார்வதி மன்றாடியார் கல்விக்குழுமங்களின் செயலாளர் எஸ்.நவீன்மன்றாடியார், முன்னாள் மாணவர்கள் சங்கத்தலைவர் எஸ்.குப்புச்சாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் ஜோதிகுருசாமி, காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, தாசில்தார் மாணிக்கவேலு, தலைமை ஆசிரியர் எம்.நரேந்திரன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெற்றோர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் முன்னாள் மாணவர் பி.முத்துக்குமார் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story