சென்னை ஆட்டோ டிரைவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை
சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில், பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை ஐஸ்அவுஸ் ராஜாஜி நகரை சேர்ந்தவர் முனியன்(வயது 24). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு மதியம் 3 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். இந்தநிலையில் ராம் நகர் 8-வது தெரு வழியாக முனியன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதனால் முனியன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது மோதிய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் திடீரென்று அரிவாளால் முனியனை சரமாரியாக வெட்டினார். இதில் முனியன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த கொலையை நேரில் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கொலையாளி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார்.
கொலை குறித்து தகவலறிந்து ஐஸ்அவுஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் முனியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் குடிபோதை தகராறில் அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற ரவுடி தான் முனியனை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாகி உள்ள சத்யாவை பிடிக்க 3 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story