வைரமுத்துவை கண்டித்து பெருமாள் பக்தர்கள் ஆர்ப்பாட்டம்
தாம்பரம் அருகே வைரமுத்துவை கண்டித்து பெருமாள் பக்தர்கள் ஆர்ப்பாட்டம்.
தாம்பரம்,
ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தவறுதலான கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று காலை சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணையில் உள்ள சீனிவாசபெருமாள் கோவில் பக்தர்கள் கண்டன பேரணி நடத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரணியை பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதாசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இதில் பெண்கள் உள்பட சீனிவாசபெருமாள் கோவில் பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து கவிஞர் வைரமுத்துவை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று அதே பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சம்பத்குமார், பா.ஜனதா கட்சியின் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொற்றாமரை சங்கரன், முன்னாள் கவுன்சிலர் கோவில் ராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story