முதல்-அமைச்சராக வருவேனோ இல்லையோ, சிறந்த சேவகனாக இருப்பேன்
முதல்-அமைச்சராக வருவேனோ இல்லையோ சிறந்த சேவகனாக இருப்பேன் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாக்களில் கலந்து கொண்டார். ஏழை எளிய மக்களுக்கு அரிசி, வெல்லம், நெய், பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் மற்றும் வேட்டி, சேலைகள், குடைகள் உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இங்கு பேசியவர்கள், முதல்-அமைச்சராக வரப்போகிறார் என்று எண்ணி எனக்கு வாக்களித்தீர்கள் என்றனர். நான் அவர்களுக்கும், உங்களுக்கும் சொல்ல விரும்புவது, நான் முதல்-அமைச்சராக வருகிறேனோ, இல்லையோ ஆனால் இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில், நான் என்றைக்கும் உங்களுடைய முதல் குடிமகனாக, உங்களுடைய முதல் காவலனாக, இந்தத் தொகுதிக்குப் பணியாற்றும் சிறந்த சேவகனாக என்றைக்கும் இருப்பேன் என உறுதியுடன் சொல்ல விரும்புகிறேன்.
போகி என்றால் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற நிலையில், நம்மை பிடித்துள்ள சனி இன்றோடு ஒழிந்திட வேண்டும். வீட்டிலிருக்கும் பழையனவற்றை மட்டுமல்ல, இந்த நாட்டிலிருக்கும் பழையனவற்றையும் அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உருவாகியிருக்கிறது. எனவே, நம்முடைய தமிழகத்தை காப்பாற்ற, தமிழகத்துக்கு ஒரு விடிவுகாலத்தை உருவாக்கிட, தமிழக மக்களுக்குத் தேவையான திட்டங் களை உருவாக்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்து மதம் மட்டுமல்ல எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதை தி.மு.க. ஊக்கப்படுத்தாது, உடன்படாது. கவிஞர் வைரமுத்து இது தொடர்பாக மனம் திறந்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். இதன் பிறகும் இதனை பூதாகரமாக பெரிதாக்கி, அதன் மூலமாக அரசியலுக்குப் பயன்படுத்தி, சதி செய்யும் வேலையில் சிலர் இறங்கியிருக்கிறார்கள். அது தவறு. அதனை வளர விடுவது நல்லதல்ல. எனவே, அதை நான் கண்டிக்கிறேன்.
குமரி முனை முதல் காஷ்மீர் வரையிலும் வசிக்கும் மக்களின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் மிகப்பெரிய இடத்தில் உச்சநீதிமன்றம் இருக்கிறது. அப்படிப்பட்ட உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் இடையே பல சர்ச்சைகள் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே, அவையெல்லாம் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். எனவே, உச்சநீதிபதிகள் அமர்ந்து பேசி, அவற்றை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு, மக்களுடைய ஜனநாயகத்தைப் பாதுகாக்க, அந்தத் துறையை நல்ல நிலைமைக்குக் கொண்டுவர வேண்டும். ஒருவேளை, நீதிபதிகளால் அதை தீர்க்க முடியாத நிலை வந்தால், ஜனாதிபதி அதில் தலையிட்டு, சரிசெய்ய வேண்டுமென்று, தி.மு.க. சார்பில் நான் மிகுந்த பணிவோடு வலியுறுத்துகிறேன்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி பொங்கல் தினத்தில் தொண்டர்களை சந்திப்பது குறித்து மருத்துவர்களின் கருத்தைக் கேட்டறிந்து, அவர் கள் ஒப்புகொண்டால், அதற் காக முயற்சி எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story