ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து: கவிஞர் வைரமுத்து மீது வழக்குப்பதிவு


ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து: கவிஞர் வைரமுத்து மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 14 Jan 2018 3:45 AM IST (Updated: 14 Jan 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கவிஞர் வைரமுத்து மீது ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் கடந்த 7-ந் தேதி தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவருக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ராஜபாளையம் நகர இந்து முன்னணி செயலாளர் சூரியநாராயணன் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், இந்து மக்களின் மனது புண்படும் வகையில் பேசிய கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் தாயாரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

புகாரின்பேரில் கவிஞர் வைரமுத்து மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் அவமதிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளார். 

Next Story