ராமேசுவரத்தில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்


ராமேசுவரத்தில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Jan 2018 3:42 AM IST (Updated: 14 Jan 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய ஆதிதமிழர் பேரவை வலியுறுத்தி உள்ளது.

ராமநாதபுரம்,

ராமேசுவரத்தில் எம்.கே.நகர் சமுதாய கூடத்தில் ஆதிதமிழர் பேரவை நகர் இளைஞரணி செயலாளர் விடுதலை குமரன் தலைமையில் நகர் செயலாளர் பூமிநாதன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நகர் தலைவர் சுப்பிரமணியன், இளைஞரணியை சேர்ந்த பிரபு, ரமேஷ், சேது, ராமன், மோகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் ராமேசுவரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு அரசு வழங்கிய 3.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டின்படி ஆண்கள், பெண்கள் என 2 தனி வார்டு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் புதிதாக விதிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

ஏற்கனவே உள்ள வரியையே வசூலிக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் உண்ணாவிரதம், மற்றும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதிதமிழர் பேரவை முழு ஆதரவு அளிக்கும். அருந்தியர் மக்கள் அதிகம் வசிக்கும் சத்யா நகர், பி.எஸ்.எம்.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், ஒண்டிவீரன் நகர், லட்சுமி நகர், பெரியார் நகர் பகுதிகளை ஒன்றாக இணைத்து பொது வார்டாக அறிவிக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story