நன்னிலம் அருகே ஆம்னிபஸ் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்


நன்னிலம் அருகே ஆம்னிபஸ் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 14 Jan 2018 4:15 AM IST (Updated: 14 Jan 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து 11 பேர் காயமடைந்தனர்.

நன்னிலம்,

சென்னையில் இருந்து திருவாரூக்கு நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. அதில் 42 பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் பஞ்சமூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார். மேலும், பஸ்சின் மாற்று டிரைவராக ரஜினி என்பவர் பணியில் இருந்தார். அப்போது சிதம்பரத்தில் 22 பயணிகள் இறங்கிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து பஸ் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ் திருவாரூரை நெருங்கிய போது அதிகாலை என்பதால் பஸ்சில் இருந்து அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். நன்னிலம் அருகே உள்ள கீழபனங்குடி என்ற இடத்தில் ஒரு வளைவில் பஸ் திரும்பியபோது பஸ் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூக்குரலிட்டனர்.

11 பேர் படுகாயம்

இதில் பஸ்சில் இருந்த டிரைவர் ரஜினி உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த கொரடாச்சேரியை சேர்ந்த மணிகண்டன், அவருடைய மனைவி உமாதேவி, கார்த்திகேயன் (வயது 32), கொடிக்கால்பாளையத்தை சேர்ந்த ராஜேஸ்வரி (30), திருவாரூரை சேர்ந்த ரஞ்சித்குமார் (39), ரவீனா (30), திருப்பத்தூரை சேர்ந்த ஜெயசுதா (21), குடவாசலை சேர்ந்த திவ்யா (18), திருவலஞ்சுழியை சேர்ந்த கீர்த்திகா (22), ரூபிகா (18) ஆகிய 10 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பஸ்சில் பயணம் செய்த கொரடாச்சேரியை சேர்ந்த மணிகண்டன் நன்னிலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை இல்லாததே விபத்துக்கு காரணம் என்றும், இதுபோன்று 10-கும் மேற்பட்ட விபத்துக்கள் இந்த இடத்தி நடந்துள்ளது.

இதில் 3 பேர் இந்த இடத்தில் உயிரிழந்துள்ளனர். எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story