பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது
திருச்சி,
திருச்சி உறையூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த தேன்ராஜ் (வயது 68), உறையூர் பங்காளி தெருவை சேர்ந்த பாரூக் (43), தில்லைநகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்த செந்தில்குமார்(35), திருச்சி முள்ளிப்பட்டியை சேர்ந்த கருப்பையா(32), பாலக்கரை அருணாச்சல காலனியை சேர்ந்த சுரேஷ்(37), திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலை சேர்ந்த ஜெப்ரி(30), காசீம்(28), உறையூர் கீழ வைக்கோல்கார தெருவை சேர்ந்த பாண்டித்துரை(51), தாராநல்லூரை சேர்ந்த மதி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ.9 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Tags :
Next Story