காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 Jan 2018 4:00 AM IST (Updated: 14 Jan 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

கரூர்,

கரூர் வடக்கு காந்திகிராமத்தை சேர்ந்தவர் ரியாஸ்அலி(வயது 32). இவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

ரியாஸ்அலியின் மனைவி ஹஸ்னா(22). இவர் கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. படிக்கும்போது கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு ரியாஸ்அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்பு வேறு மதத்தில் இருந்த இவர், திருமணத்திற்கு பின் ஹஸ்னா என பெயர் மாற்றிக்கொண்டார். இந்த நிலையில் ஹஸ்னா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார் விரைந்து சென்று ஹஸ்னா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் திருமணமான 1½ வருடத்தில் ஹஸ்னா இறந்ததால் கரூர் உதவி கலெக்டர் சரவணமூர்த்தியும் விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்தது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story