நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க வழக்கறிஞர்கள் விரைந்து செயல்பட வேண்டும்
நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க வழக்கறிஞர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என புதுக்கோட்டையில் நடந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கூடுதல் சார்புநீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-2, திருமயம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற இணைந்த குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கட்டிடம் மற்றும் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் இணைந்த குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற கட்டிடங்களின் திறப்பு விழா புதுக்கோட்டை மாலையீட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் ரபிந்தர் கட்டிடங்கள் குறித்து அறிக்கை வாசித்தார்.
பின்னர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமை தாங்கி, புதிய நீதிமன்றங்கள் மற்றும் கட்டிடங்களை காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
வரலாற்று சிறப்பு மிக்க புதுக்கோட்டையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். புதுக்கோட்டையை சேர்ந்த சாந்தி, சூர்யா, லெட்சுமணன் ஆகியோர் விளையாட்டின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். அதேபோல் நீதி துறையிலும் புதுக்கோட்டை பெருமையடைய வேண்டும். வழக்குகளில் நீதிபதிகள் விரைந்து தீர்ப்பளிக்க வழக்கறிஞர்கள் தங்கள் வழக்குகள் குறித்து விரைவாகவும் முழுமையாகவும் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் வழக்கறிஞர்கள் வாய்தா வாங்குவதை தவிர்த்தல் வேண்டும். அதுவும் தேவைபடும் பட்சத்திலும் அவசியபடும் போது மட்டுமே வாய்தா கேட்க வேண்டும்.
நிலுவையில் உள்ள வழக்குளை முடிக்க வழக்கறிஞர்கள் விரைந்து செயல்பட வேண்டும். நான் 16½ ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளேன். எனவே வழக்கறிஞர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அறிவேன். எனவே வழக்கறிஞர்கள் தங்களின் தேவைகளை பெற போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். போராட்டங்கள் நடத்துவதால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். நீதிபதியை பொறுத்தவரை மூன்று முக்கிய அம்சங்களை கடைபிடிக்க வேண்டும். தேச ஒற்றுமை, பாகுபாடு இன்றி செயல்படுவது, சமுதாய நலத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். வழக் கறிஞர்கள் தேவையற்ற வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வழக்கறிஞர்கள் தங்களுடைய நேரத்தை ஒதுக்கி அந்தந்த பகுதிகளில் உள்ள சட்ட ஆணைய குழுவிற்கு சென்று கால மாற்றத்திற்கு ஏற்ப சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கோவிந்தராஜ், சுரேஷ்குமார், மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், வக்கீல் சங்க தலைவர் சின்னராசு, செயலாளர் கருணாநிதி, திருமயம் தொகுதி எம்.எல்.ஏ. ரகுபதி, மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தமிழ்செல்வி வரவேற்றார். முடிவில் தலைமை குற்றவியல் நீதிபதி நாகராஜன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story