விமான நிலையத்திற்கு இணையாக சேலம், கோவை, மதுரையில் ‘பஸ் போர்ட்’ அமைக்கப்படும்
விமான நிலையத்திற்கு இணையாக சேலம், கோவை, மதுரையில் ‘பஸ் போர்ட்‘ அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம்,
சேலம்-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இரும்பாலை சந்திப்பு பகுதியில் சேகோசர்வ் அருகில் ரூ.21 கோடியே 97 லட்சம் மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதிய மேம்பாலம் அமைப்பதற்கான பூமிபூஜையில் அடிக்கல்லை நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-
வளர்ந்து வரும் சேலம் மாநகரில் அடுத்த 7 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட இருக்கும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, 5 ரோடு, குரங்குச்சாவடி, திருவாக்கவுண்டனூர், செவ்வாய்பேட்டை, முள்ளுவாடி, மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனுமதி அளித்தார்.
திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலை பகுதியில் புதிய மேம்பாலம் கட்ட நானே அடிக்கல் நாட்டி பணிகள் முடிந்ததும் அதை நானே கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைத்தது பெரிய சாதனை. சேலம் மாநகர மக்களின் கோரிக்கைகளை இதற்கு முன்னாள் யாரும் நிறைவேற்றவில்லை. தற்போது அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. சேலத்தில் உள்ள பாலங்களை பார்க்கும்போது எனக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு தான் வருகிறது.
மேலும் சேலம் புறநகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் விடுத்த கோரிக்கையை ஏற்று, சேலம் மாவட்டம் மல்லூரில் இருந்து அரபிக்கல்லூரி வரை உள்ள 21 கிலோ மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கவும் அனுமதிப்பதாக அவர் உறுதி அளித்தார்.
சேலத்தில் பிரமாண்ட பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, விமான நிலையத்திற்கு இணையான அத்தனை வசதிகளையும் கொண்ட அதிநவீன ‘பஸ் போர்ட்‘, அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் கோவை, மதுரையில் அதிநவீன வசதியுடன் கூடிய பஸ் போர்ட் அமைக்கவும் சென்னையில் மத்திய மந்திரி நிதின்கட்காரியிடம் கோரிக்கை விடுத்ததுடன், அதற்கு அனுமதி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். விரைவில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து பஸ் போர்ட் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனையடுத்து நிருபர்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டிற்கு பின்னர் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிக அளவில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் மாநகரில் பஸ் போர்ட் அமைக்க 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களை மத்திய அரசு அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு இறுதி செய்தவுடன் பணிகள் தொடங்கும். குட்கா விவகாரம் குறித்து எதுவும் சொல்வதற்கு இல்லை. ஏனென்றால் இந்த பிரச்சினை கோர்ட்டில் இருப்பதால் அதுகுறித்து தற்போது பேசுவது வழக்கிற்கு குந்தகம் விளைவிக்ககூடும். விவசாயிகளுக்கு புதிய திட்டங்கள் நடைபெற இருக்கும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெற்றிவேல், மனோன்மணி, சித்ரா, மருதமுத்து, ராஜா, சின்னதம்பி, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.துணைத்தலைவர் ஏ.கே.எஸ்.எம்.பாலு, பொருளாளர் பங்க் வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சேலம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைராஜ், சூரமங்கலம் கூட்டுறவு வீடு கட்டும் சங்க தலைவர் ரவி, பகுதி செயலாளர்கள் தியாகராஜன், சரவணன், சண்முகம், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் அசோக்குமார், முன்னாள் கவுன்சிலர் கிருபாகரன், மாநகராட்சி ஆணையாளர் ஆர்.சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story