செல்போனை தாய் வாங்கிக்கொண்டதால் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
செல்போனை தாய் வாங்கிக்கொண்டதால், பெருந்துறையில் இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு
பெருந்துறை குன்னத்துர் ரோடு சேரன் நகரை சேர்ந்தவர் செல்வம் என்கிற ஸ்டீபன். அவருடைய மனைவி பாரதி. இவர்களுடைய மகள்கள் பிரியா (வயது 20), கீர்த்தனா (17).
ஸ்டீபன் சேலத்தில் உணவு பொருள் விற்கும் ஏஜெண்டாக உள்ளார். பிரியா அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கீர்த்தனா 9–ம் வகுப்பு வரை படித்துவிட்டு பெருந்துறையில் செயல்பட்டு வரும் ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் வேலைக்கு செல்லாமல் கீர்த்தனா செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய் பாரதி இப்படி வேலைக்கு செல்லாமல் செல்போனில் பேசிக்கொண்டு இருக்கிறாயே? என்று அந்த செல்போனை வாங்கி வைத்துக்கொண்டார்.
இதனால் மனவேதனையில் கீர்த்தனா இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சேலையால் துக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றிருந்த பாரதியும், பிரியாவும் வீட்டுக்கு திரும்பியபோது, கீர்த்தனா தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி துடித்தார்கள். இதுபற்றி பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story