மாவட்ட செய்திகள்

மதுரை-திண்டுக்கல் இணைப்பு சாலையை சீரமைக்க கோரிக்கை + "||" + Request to revamp Madurai-Dindigul link road

மதுரை-திண்டுக்கல் இணைப்பு சாலையை சீரமைக்க கோரிக்கை

மதுரை-திண்டுக்கல் இணைப்பு சாலையை சீரமைக்க கோரிக்கை
ரணசிங்கபுரம் வழியாக மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் இணைப்பு சாலை உள்ளது.
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே ரணசிங்கபுரம் வழியாக மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதன்பின்னர் இந்த சாலையை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதால் தற்போது முற்றிலும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்தும், குண்டும், குழியுமாகவும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலை திருவுடையார்பட்டி, ரணசிங்கபுரம், காரையூர் ஆகிய ஊராட்சிகளுக்கு முக்கிய பிரதான சாலையாகவும் பயன்படுகிறது. மேலும் மதுரை ரோட்டில் இருந்து திண்டுக்கல் ரோடு செல்ல வேண்டும் என்றால் திருப்பத்தூர் வந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் இந்த இணைப்புச் சாலையில் சென்றால் 3 கி.மீ. தூரத்திலேயே சென்றடையலாம். எனவே மதுரை-திண்டுக்கல் இணைப்பு சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.