மாவட்ட செய்திகள்

மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது + "||" + People gather at the fishing harbor to gather fish

மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது

மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது
அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
நாகப்பட்டினம்,

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. நேற்று மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது.

மேலும், பொதுமக்கள் தங்களது முன்னோர்கள் விரும்பி சாப்பிடும் உணவு பொருட்களை வைத்து படையலிட்டு வழிபடுவர். இதற்காக நேற்று நாகையில் மீன், இறைச்சி வாங்குவதற்காக கடைகளில் மக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அதேபோல் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்காக திரளான பொதுமக்கள் திரண்டனர். மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. 1 கிலோ ரூ.120-க்கு விற்ற வாளை மீன் ரூ.200-க்கும். ரூ. 500-க்கு விற்ற வாவல் மீன்கள் ரூ.900-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நண்டு மற்றும் இறால் கிலோ ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் அதிகவிலை கொடுத்து மீன்களை வாங்கி சென்றனர்.


அதேபோல் நேற்று பெரிய கடைத்தெரு, பாரதி மார்க்கெட், காடம்பாடி, வெளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சி, மீன்கள் வாங்குவதற்காக கூட்டம் அலைமோதியது.

வேதாரண்யம்

வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இறைச்சி கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.