பட்டாசு ஆலை பிரச்சினைக்கு தீர்வு காண கோரி ரெயில் மறியல், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு


பட்டாசு ஆலை பிரச்சினைக்கு தீர்வு காண கோரி ரெயில் மறியல், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 16 Jan 2018 3:30 AM IST (Updated: 16 Jan 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்,

சி.ஐ.டி.யூ. பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். தொடங்கி வைத்து மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசினார். சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் தேவா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பட்டாசு தொழில் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டுள்ள பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் வருகிற 18-ந்தேதி திருத்தங்கல் மற்றும் சாத்தூரில் ரெயில் மறியல் போராட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், பட்டாசு தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பி.பாண்டி, பிச்சைக்கனி, ஆர். பாண்டி ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story