மாவட்ட செய்திகள்

காவலாளியை தாக்கிய வாலிபர் கைது + "||" + A young man attacking the guard was arrested

காவலாளியை தாக்கிய வாலிபர் கைது

காவலாளியை தாக்கிய வாலிபர் கைது
காவலாளியை தாக்கிய வாலிபர் கைது
வாரியங்காவல்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை (வயது 55). இவர் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் புதிதாக கட்டி கொண்டிருக்கும் கட்டிடத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராமு மகன் தினேஷ்வரன் (22), குருநாதன் மகன் சதீஷ்அரவிந்த் (27), சுப்பிரமணியன் மகன் அரவிந்த் ராஜ் (26), குணா மகன் விஜய் (25) ஆகியோர் அப்பகுதியில் வந்து மது குடித்துள்ளனர். இதை பார்த்த காவலாளி பிச்சை பிள்ளை ஏன்? இங்கு வந்து குடிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து பிச்சை பிள்ளையை திட்டி கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இதில் படுகாயமடைந்த பிச்சைபிள்ளையை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூவ் காந்தி வழக்குப்பதிவு செய்து தினேஷ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இதில் தொடர்புடைய சதீஷ் அரவிந்த், அரவிந்த் ராஜ், விஜய் ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.