தேவதானப்பட்டி அருகே காரில் கஞ்சா கடத்திய 5 வாலிபர்கள் கைது
தேவதானப்பட்டி அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தேவதானப்பட்டி,
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள காட்ரோடு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கம்பத்தில் இருந்து வந்த காரை மறித்து சோதனை செய்தனர். காரில் 5 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையொட்டி காரில் இருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த அப்துல்லா (வயது 23), அபின் (23), ரோலாந்த் (23), முகமதுபைசின் (22), இமானுவேல் (23) என்று தெரிய வந்தது.
மேலும் இவர்கள் கம்பத்தை சேர்ந்த லதா என்பவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. கஞ்சா வியாபாரி லதாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story