எம்.எல்.ஏ. ஓட்டிய கார், ஆட்டோ மீது மோதியது டிரைவர் உள்பட 3 பேர் காயம்


எம்.எல்.ஏ. ஓட்டிய கார், ஆட்டோ மீது மோதியது டிரைவர் உள்பட 3 பேர் காயம்
x
தினத்தந்தி 16 Jan 2018 3:31 AM IST (Updated: 16 Jan 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

மூடிகெரே தொகுதி எம்.எல்.ஏ. ஓட்டிய கார், ஆட்டோ மீது மோதியது.

சிக்கமகளூரு, 

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தொகுதி எம்.எல்.ஏ. நிங்கய்யா. ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சிருங்கேரிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச் சென்றார். அப்போது அவர் கொப்பா தாலுகா ஹேரூர்கேட் அருகே வந்தபோது, நிங்கய்யாவின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது. இதில், ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதி மக்கள் 3 பேரையும் மீட்டு மூடிகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று திரும்பி சென்றனர். இந்த விபத்தில் நிங்கய்யா எம்.எல்.ஏ. எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார். இதுகுறித்து ஜெயப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story