மாவட்ட செய்திகள்

ஐஸ்அவுஸ் பகுதியில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு 6 பேர் கும்பல் தாக்குதல் + "||" + Ice Cream area Cut the scythe for 2 people 6 people gang attack

ஐஸ்அவுஸ் பகுதியில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு 6 பேர் கும்பல் தாக்குதல்

ஐஸ்அவுஸ் பகுதியில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு 6 பேர் கும்பல் தாக்குதல்
சென்னை ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 50). இவருடைய நண்பர் சீனிவாசன். இருவரும் நேற்று முன்தினம் இரவு இதயதுல்லா தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
சென்னை,

அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர், யுவராஜையும், சீனிவாசனையும் வழிமறித்து அரிவாளால் வெட்டினர். அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டனர். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.


இதையடுத்து படுகாயமடைந்த யுவராஜூம், சீனிவாசனும் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சென்னை ஐஸ் அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக தோட்டம் சேகரின் மகன்கள், மைத்துனர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவான அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.