திருவள்ளூர் அருகே துணி வியாபாரிக்கு அடி-உதை; வாலிபர் கைது


திருவள்ளூர் அருகே துணி வியாபாரிக்கு அடி-உதை; வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 Jan 2018 4:29 AM IST (Updated: 16 Jan 2018 4:29 AM IST)
t-max-icont-min-icon

துணி வியாபாரியை அடித்து உதைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அருகே


சென்னை சூளை வரதராஜப்பேட்டையை சேர்ந்தவர் சீனி முகமது(வயது 55). துணி வியாபாரி. இவர், சம்பவத்தன்று திருவள்ளூரை அடுத்த திருமழிசை மசூதி அருகில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த திருமழிசையை சேர்ந்த மற்றொரு வியாபாரியான நம்பி தேவராஜ்(35), இங்கு எதற்காக வியாபாரம் செய்கிறாய்? என்று கூறி தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர், சீனி முகமதுவை தகாத வார்த்தையால் பேசியதுடன், அடித்து உதைத்ததாகவும் தெரிகிறது.

இது குறித்த புகாரின்பேரில் வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நம்பி தேவராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த கிளாம்பாக்கம் விஷ்ணுநகரை சேர்ந்தவர் ஜானகிராமன்(30). இவர் தனது மனைவி விஜயலட்சுமி(27) உடன் ஸ்ரீதர் என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். வீட்டின் உரிமையாளர் ஸ்ரீதர், வீட்டை காலி செய்யுமாறு கூறியதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜானகிராமன் தனது மனைவியுடன் வீட்டில் இருந்த போது அங்கு வந்த ஸ்ரீதர், அவருடைய மனைவி இந்திராணி, மகன் திவாகரன் ஆகியோர் ஒன்று சேர்ந்து கணவன்-மனைவி இருவரையும் தகாத வார்த்தையால் பேசியதுடன், விஜயலட்சுமியின் புடவையை பிடித்து இழுத்து தாக்கியதாகவும், ஜானகிராமனை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி செவ்வாப்பேட்டை போலீசார், ஸ்ரீதர் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story