புதிய அரசு விரைவு பஸ் பணிமனை அமைக்க வேண்டும்
திசையன்விளையில் புதிய அரசு விரைவு பஸ் பணிமனை அமைக்க வேண்டும் துணை முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
நெல்லை,
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், திசையன்விளை முன்னாள் நகரப்பஞ்சாயத்து தலைவரும், நெல்லை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவருமான ஏ.கே.சீனிவாசன் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சுமார் 40 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். திசையன்விளையை சுற்றி 50 குக்கிராமங்களும் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பலர் தொழில் மற்றும் வேலைகளுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
தினமும் திசையன்விளையில் இருந்து சென்னை, கோவை செல்ல 35 ஆம்னி பஸ்கள் உள்ளன. இவற்றில் பயண கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதால், சாமானிய மக்கள் அவற்றில் பிரயாணம் செய்ய முடிவதில்லை. தமிழக அரசு உடனடியாக திசையன்விளையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க உத்தரவிட்டால், இங்கு இருந்து உடன்குடி, திருச்செந்தூர், தூத்துக்குடி மார்க்கமாகவும், சாத்தான்குளம், பேய்க்குளம், மூலைக்கரைப்பட்டி, திருநெல்வேலி மார்க்கமாகவும், இட்டமொழி, நாசரேத், ஆழ்வார்திருநகரி, திருநெல்வேலி மார்க்கமாகவும், பரப்பாடி, நாங்குநேரி, திருநெல்வேலி மார்க்கமாகவும், நவ்வலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், விஜயாபதி, கூடங்குளம், வள்ளியூர், திருநெல்வேலி மார்க்கமாகவும், ராதாபுரம், வடக்கன்குளம், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர், திருநெல்வேலி மார்க்கமாகவும் அதிகமாக பஸ்கள் விட வாய்ப்புள்ளது. பணிமனை அமைக்க ஏற்கனவே கடந்த 14.8.1991-ம் ஆண்டு நகரப்பஞ்சாயத்தில் திருவள்ளுவர் அரசு விரைவு பேருந்து பணிமனை அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், கடந்த 1990-ம் ஆண்டு தமிழக அரசால் இங்கு ஒரு தற்காலிக பணிமனை அமைக்க உத்தேசிக்கப்பட்டது. தற்போது திசையன்விளையை தமிழக அரசு தனித்தாலுகாவாக அறிவித்துள்ள நிலையில் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக திசையன்விளையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட துணை முதல்வர், உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.

Related Tags :
Next Story