பெங்களூருவில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை


பெங்களூருவில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 17 Jan 2018 2:00 AM IST (Updated: 17 Jan 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு,

பெங்களூருவில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தம்பதி தூக்கில் தொங்கினர்

பெங்களூரு சம்பங்கிராம் நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட 7-வது கிராசில் வசித்து வந்தவர் பரமேஸ்வர் (வயது 51). இவரது மனைவி சசிகலா (45). இந்த தம்பதிக்கு 25 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளார்கள். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து, கணவருடன் வசித்து வருகின்றனர். பரமேஸ்வரும், சசிகலாவும் கைத்தொழில் செய்து வந்தார்கள். இந்த நிலையில், நேற்று முன்தினம் சசிகலாவை பார்க்க, அவரது தோழி வீட்டிற்கு சென்றார்.

அப்போது வீட்டுக்கதவு உட்புறமாக பூட்டி கிடந்தது. இதனால் சசிகலாவை கதவை திறக்கும்படி, அவரது தோழி கூறினார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. உடனே சந்தேகம் அடைந்த அவருடைய தோழி ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது பரமேஸ்வரும், சசிகலாவும் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் சம்பங்கிராம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

காரணம் என்ன?

உடனே போலீசார் விரைந்து வந்து வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் தம்பதியின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது பரமேஸ்வர், சசிகலா கடந்த 14-ந் தேதி இரவே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் ஏற்கனவே பரமேஸ்வர் 2 முறை தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் தம்பதி என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் சம்பங்கிராம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story