ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து: கர்நாடக காங்கிரசின் எதிர்ப்பும், வரவேற்பும்
ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து செய்யப்பட்டதற்கு கர்நாடக காங்கிரஸ் எதிர்ப்பும், வரவேற்பும் தெரிவித்து உள்ளது.
பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கவனம் செலுத்த வேண்டும்
ஹஜ் புனித பயணத்திற்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறுபான்மை குறிப்பாக இஸ்லாமிய மக்களின் மீது பா.ஜனதாவுக்கு இருக்கும் அக்கறையை இது எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இன்று(அதாவது நேற்று) நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சி கொடுத்த பொறுப்பை சரியான முறையில் நிர்வகிக்கும்படி அறிவுறுத்தினோம்.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடியும்வரை நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் தங்கி இருந்து கட்சி பணியாற்ற வேண்டும். அவர்கள் யாரும் தொகுதியை விட்டு வெளியேறக்கூடாது. மாநில அரசின் சாதனைகளை மக்களுக்கு தெரிவிப்பது, பூத் கமிட்டிகளை பலப்படுத்துவது போன்ற பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறோம்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.
நாங்கள் வரவேற்கிறோம்
காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், “ஹஜ் புனித யாத்திரைக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை ரத்து செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கூறியது. இதை அப்போதே காங்கிரஸ் வரவேற்றது. இப்போதும் மத்திய அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்“ என்றார்.
நகர வளர்ச்சித்துறை மந்திரி ரோஷன் பெய்க் கூறுகையில், “ஹஜ் யாத்திரைக்கு மானியத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். இஸ்லாமிய மக்கள் சொந்த செலவில் புனித யாத்திரை மேற்கொள்வார்கள்“ என்றார். மத்திய அரசின் ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து செய்யப்பட்ட முடிவுக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அதே நேரத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவும், மந்திரி ரோஷன் பெய்க்கும் அதை வரவேற்று உள்ளனர்.

Related Tags :
Next Story