தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மறியல்
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம்,
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விஸ்தரிப்பு செய்யப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. கோவை- சென்னையை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சாலை மேடு பள்ளமாக மாறி, பழுதடைந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் எந்திரங்கள் கொண்டு சாலையை அப்படியே பெயர்த்து எடுத்து ஒரு பகுதியில் போட்டு வைத்துள்ளனர். மாயனூர் பெட்ரோல் பங்க் அருகில் தொடங்கி மாயனூர் தண்ணீர் பாலம், கிருஷ்ணராய புரம் தாலுகா அலுவலகம், பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் சாலையை பெயர்த்து எடுத்துள்ளனர். ஆனால் அப்பகுதிகளில் மீண்டும் சாலை அமைக்கப்படவில்லை.
இதனால் ஒரு பகுதியில் லேசான பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் தினந்தோறும் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். தினமும் குறைந்தது 5-க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்குகின்றனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் விபத்தில் சிக்கினர். இதை யடுத்து ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து கிருஷ்ணராயபுரம் கள்ளுக் கடை பாலம் அருகே கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பாலசுந்தரம், மாயனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் சாலை சீரமைக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story