நீதிக்காக போராடி வரும் எங்களை பயங்கரவாதிகள் என சித்தராமையா கூறுவது சரியல்ல ஈசுவரப்பா பேட்டி


நீதிக்காக போராடி வரும் எங்களை பயங்கரவாதிகள் என சித்தராமையா கூறுவது சரியல்ல ஈசுவரப்பா பேட்டி
x
தினத்தந்தி 17 Jan 2018 2:30 AM IST (Updated: 17 Jan 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

நீதிக்காக போராடி வரும் எங்களை பயங்கரவாதிகள் என சித்தராமையா கூறுவது சரியல்ல என்று ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு,

நீதிக்காக போராடி வரும் எங்களை பயங்கரவாதிகள் என சித்தராமையா கூறுவது சரியல்ல என்று ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.

நல்ல வரவேற்பு

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுனில் மகர சங்கராந்தி விழா நடைபெற்றது. இதில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மேல்சபை எதிர்க்கட்சி தலைவருமான ஈசுவரப்பா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஈசுவரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

பா.ஜனதா கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் பரிவர்த்தனா யாத்திரை நடந்து வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதனால் வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிகமான இடத்தில் வெற்றிப் பெற்று எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் இந்து பிரமுகர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் இந்து அமைப்பினர் மீது தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நீதிக்காக போராடி வரும்...

இந்து அமைப்பினர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யும்படி நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் நீதிக்காக போராடி வரும் எங்களையே, முதல்-மந்திரி சித்தராமையா பயங்கரவாதிகள் என கூறி வருகிறார். இது சரியல்ல. வறட்சி தாலுகாவான கடூரில் பத்ரா கால்வாய் திட்டம் மந்தகதியில் நடந்து வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க இந்த தொகுதி மக்கள் பா.ஜனதா கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story