விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி போட்டி
விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி போட்டி நடந்தது.
விளாத்திகுளம்,
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, விளாத்திகுளம் அருகே சூரங்குடியில் மாட்டு வண்டி போட்டி கடந்த 2 நாட்கள் நடந்தது. சூரங்குடி- விளாத்திகுளம் ரோட்டில் பந்தய தூரம் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் மாலையில் பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டி நடந்தது. இதில் சிங்கிலிபட்டி ஆனந்த் மாட்டு வண்டி முதலிடமும், சக்கம்மாள்புரம் கமலா மாட்டு வண்டி 2-வது இடமும், சித்தவநாயக்கன்பட்டி பரமசிவம் மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தது.
நேற்று காலையில் பெரிய மாட்டு வண்டி போட்டி நடந்தது. இதில் சங்கரப்பேரி ஆறுமுகபாண்டியன் மாட்டு வண்டி முதலிடமும், வள்ளிநாயகபுரம் சோலையப்பன் மாட்டு வண்டி 2-வது இடமும், வேலங்குளம் கண்ணன் மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தது.
பின்னர் சிறிய மாட்டு வண்டி போட்டி நடந்தது. இதில் கடம்பூர் குமார்ராஜா மாட்டு வண்டி முதலிடமும், ராமநாதபுரம் மாவட்டம் எதிரணைப்பட்டி ஆறுதாஸ் ஏசு மாட்டு வண்டி 2-வது இடமும், சக்கம்மாள்புரம் கமலா மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தது. பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
பெரிய மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசாக ரூ.15 ஆயிரத்து 1, 2-வது பரிசாக ரூ.12 ஆயிரத்து 1, 3-வது பரிசாக ரூ.8 ஆயிரத்து 1 வழங்கப்பட்டது. சிறிய மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரத்து 1, 2-வது பரிசாக ரூ.8 ஆயிரத்து 1, 3-வது பரிசாக ரூ.6 ஆயிரத்து 1 வழங்கப்பட்டது. பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசாக ரூ.7 ஆயிரத்து 1, 2-வது பரிசாக ரூ.6 ஆயிரத்து 1, 3-வது பரிசாக ரூ.5 ஆயிரத்து 1 வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story