ஓட்டல் உரிமையாளர் மனைவியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
பேராவூரணியில் ஓட்டல் உரிமையாளர் மனைவியிடம் 5 பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பேராவூரணி,
தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஆவணம் சாலை பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது40). இவர் ஓட்டல் உரிமையாளர். வணிகர் சங்க நிர்வாகியாகவும் உள்ளார். இவருடைய மனைவி விசாலாட்சி (37). சம்பவத்தன்று இரவு விசாலாட்சி தனது வீட்டின் பின்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு முகத்தை துணியால் மூடி இருந்த மர்ம நபர்கள் 2 பேர் விசாலாட்சியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
வலைவீச்சு
இதையடுத்து விசாலாட்சி கூச்சலிட்டார். அதை கேட்டு, முத்துசாமி மற்றும் அக்கம்பக்கத்தினர் சங்கிலி பறித்த 2 பேரையும் துரத்தி சென்றனர். ஆனால் மர்ம நபர்கள் சங்கிலியுடன் மாயமாகிவிட்டனர். இதுகுறித்து பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கிலி பறித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story