பட்டாசு தொழில் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு, தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை
பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சிவகாசி,
சிவகாசியில் அனைத்திந்திய பட்டாசு சங்கங்களின் கூட்டமைப்பு சம்மேளத்தின கூட்டம் டான்பாமா கட்டிடத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு டான்பாமா தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை தொடர்ந்து இங்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்து இங்குள்ள கட்சி தலைவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டுதான் இருந்தேன். நேரம் கிடைக்கும் போதெல்்லாம் மத்திய மந்திரிகளிடம் இதுகுறித்து விவாதமும் செய்தேன். விரைவில் பிரதமரை சந்திக்க உள்ளதால் நேரில் வந்து உரிமையாளர்களிடம் கோரிக்கைகளை கேட்டுள்ளேன்.
மற்ற கட்சி தலைவர்களைப்போல் சிவகாசிக்கு வந்து ஆதரவாக குரல் கொடுத்து செல்வது மட்டுமல்லாமல் இதற்கு விரைவில் தீர்வு காணும் வகையில் பா.ஜனதா செயல்படும். இந்தப் பொங்கலை கருப்புப் பொங்கலாக கடைபிடித்து இருந்தாலும் வரும் ஆண்டுகளில் இனிப்புப் பொங்கலாக பட்டாசு வெடித்து கொண்டாடும் வகையில் வழி வகை செய்வதற்காக ஏற்பாடுகளை பா.ஜனதா அரசு செய்து கொடுக்கும்.
இவ்வாறு கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழிசை சவுந்தரராஜன் அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆண்டாள் பற்றி தவறாக சித்தரித்தவர்களை கண்டித்து அனைத்து தரப்பினரும் தானாக முன் வந்து போராடுகின்றனர். ஆண்டாள் பற்றியும், இந்து மதம் பற்றியும் யார் தவறாக பேசினாலும் தண்டிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் இனி பேசவும் விட மாட்டோம். ஆண்டாள் வழி காட்டுபவர்கள் தான் இனி ஆள முடியும். தமிழகத்தில் நாத்திகம் அப்புறப்படுத்தப்பட வேண்டும். தர்மம் தலை காக்கப்பட வேண்டும்.
ஆன்மிகம் தழைத்தோங்கும் போது தர்மம் தலை தூக்கும். ஊழல் ஒழியும். கடந்த ஆட்சிகளில் கோவில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. தங்கச் சிலைகள் மாயமாகி உள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் தூண்கள் காணாமல் போய் உள்ளன. தமிழகத்தில் இந்துசமயஅறநிலையத்துறை ஒன்று உள்ளதா என சந்தேகம் உள்ளது.
ஹஜ் பயண மானியம் ரத்து என்பது 2012-ல் உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தி உள்ளனர். குழு அமைத்து செயல்பட்டதால் தாமதமாகி உள்ளது. இது மதம் சார்ந்த, அரசியல் சார்ந்த முடிவு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story