இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு
நெடுந்தீவு அருகில் நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்துறையினரின் அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு சென்றன.
இவற்றில் சென்றிருந்த 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள், நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக குட்டிக் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்தனர்.
இதையடுத்து மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப முயன்றனர்.
ஆனால் அதற்குள் ஒரு சில படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அந்த படகுகளுக்குள் இறங்கி மீன்களை கடலில் வீசி எறிந்ததுடன், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி, மீனவர்களையும் தாக்கினர்.
மேலும் ராமேசுவரத்தை சேர்ந்த கலையரசன், சேதுராமன், முனியசாமி ஆகியோருக்கு சொந்தமான 3 படகுகளையும், மண்டபத்தை சேர்ந்த நம்புமாரி என்பவரது படகையும், அவற்றில் இருந்த கார்மேகம், பாலா, ராதாகிருஷ்ணன், ஆபிரகாம் லிங்கன், ராமு, ராயப்பன், முத்துக்குமார், ராமர், முனியசாமி, பாலமுருகன், ஜெயசீலன், சீனி இபுராம்ஷா, பாலகுமார் உள்பட 16 மீனவர்களையும் சிறைபிடித்து காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வருகிற 29-ந்தேதி வரை அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட் டார். இதைத்தொடர்ந்து மீனவர்கள் 16 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story