அரசியலில் ஆன்மிகத்தை கொண்டு வந்து மக்களை குழப்பக்கூடாது - டி.டி.வி.தினகரன் பேச்சு
அரசியலில் ஆன்மிகத்தை கொண்டு வந்து மக்களை குழப்பக் கூடாது என்று பெருந்துறை யில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
பெருந்துறை,
டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. புதுச்சேரியில் இருந்து நேற்று குன்னூருக்கு சென்றார். அப்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வந்த அவருக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் அவர் ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சியில் விவசாயிகள், மீனவர்கள் என அனைவரது பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவில்லை. ஜெயலலிதா பெயரை மட்டுமே பயன்படுத்தும் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் உள்ளனர். கொங்கு மண்டலத்தை சேர்ந்த நீங்கள் எப்போதுமே ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்கள். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களுடைய அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்.
ஒரு அரசியல் இயக்கம் என்பது அடிப்படை கொள்கைகளுடன் செயல்பட வேண்டும். பெரும்பான்மையினர் ஓட்டுகளை பெறுவதற்காக சிறுபான்மையினரை அச்சப்பட வைக்கக்கூடாது. இது சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானது. இதை செய்பவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ்வதே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.
ஆன்மிகம் என்பது தனிமனித ஒழுக்கம் சம்பந்தப்பட்டது. அதை அரசியலில் கொண்டு வந்து தன்னையும் குழப்பிக்கொண்டு மக்களையும் குழப்பி விடக்கூடாது. இதை நான் என்றோ சொல்லி விட்டேன். இது ரஜினிகாந்தையோ, மற்றவர்களையோ குறிப்பிட்டு சொல்லவில்லை.
ஒரு மதத்தை மட்டுமே உயர்த்தி போற்றும்போது மற்ற மதத்தினர் ஏற்காமல் போகலாம். அது அவர்களுடைய தவறு கிடையாது. எனவே மதங்களை ஆன்மிகம் என்ற பெயரில் அரசியலாக்கக்கூடாது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சிறுபான்மையினரை அச்சப்படுத்தும் வகையில் ஆட்சி நடத்தப்படுகிறது. ஆனால் பெரியார் பிறந்த தமிழகத்தில் ஒரு மதத்தை சார்ந்து ஓட்டு கேட்டால் மக்கள் யாரும் ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதுவே வருங்காலத்திலும் தொடரும்.
தற்போதைய முதல்-அமைச்சர் மாற்றப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் மக்கள் விரோத, துரோக ஆட்சி முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்

Related Tags :
Next Story