ஈரோடு, திருப்பூர், கோவையில் நெசவாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
ஈரோடு, திருப்பூர், கோவையில் நெசவாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு லட்சம் கைத்தறிகள் இயங்கவில்லை.
சத்தியமங்கலம்,
பட்டு நூல் விலை உயர்த்தப்பட்டதால் கைத்தறி நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 6 மாதங்களில் நூலின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. எனவே விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கைத்தறி நெசவாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடைய போராட்டம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. நெசவாளர்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை.
ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் கைத்தறிகள் இயங்கவில்லை.
இதுகுறித்து சத்தியமங்கலத்தை சேர்ந்த நெசவாளர் மதிவாணன் என்பவர் கூறும்போது, “பட்டு நூல்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு இருப்பதால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பட்டு சேலையின் விலையை உயர்த்த வேண்டும்.
அதன்மூலம் வியாபாரம் பாதிக்கப்படும். மேலும், கைத்தறி நெசவாளர்களில் பெரும்பாலானவர்கள் கடன் வாங்கி நெசவு வேலைகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நூலின் விலையேற்றம் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. எனவே நூலின் விலையை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.

Related Tags :
Next Story