சாக்கிநாக்காவில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 3 வயது சிறுவன் பலி
சாக்கிநாக்காவில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 3 வயது சிறுவன் பலியானான்.
மும்பை,

தொட்டிக்குள் விழுந்த சிறுவன்
மும்பை சாக்கிநாக்கா பகுதியை சேர்ந்தவர் சமீர். இவரது வீட்டிற்கு சம்பவத்தன்று தண்ணீர் வரவில்லை. எனவே இவர் வீட்டிற்கு தேவையான தண்ணீரை குடியிருப்பின் கீழே உள்ள தொட்டியில் இருந்து எடுத்தார். தண்ணீர் எடுத்து முடித்த பிறகு சமீர் தொட்டியின் மூடியை மூட மறந்துவிட்டார்.
இந்தநிலையில் அங்கு விளையாடி கொண்டு இருந்த பக்கத்து வீட்டு சிறுவன் பிரனவ் (வயது 3) திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தான். அப்போது அந்த பகுதியில் யாரும் இல்லாததால் சிறுவன் தொட்டிக்குள் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை.
மூடியை திறந்து வைத்தவர் கைது
இந்தநிலையில் வெகுநேரமாக சிறுவனை காணாமல் அவனது பெற்றோர் தேடினர். அப்போது குடியிருப்பு பகுதியில் எங்கும் சிறுவன் இல்லாததால் அவனை திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் தேடினர். இதில் சிறுவன் தொட்டிக்குள் கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் சிறுவனை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு ஓடினர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சாக்கிநாக்கா போலீசார் தண்ணீர் தொட்டியின் மூடியை திறந்து வைத்த சமீரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story