கூட்டுறவு வங்கி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
நிலத்தரகர்கள் ரூ.52 லட்சம் மோசடி செய்ததால் கூட்டுறவு வங்கி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை,
சென்னை அயனாவரம் பங்காரு தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 52). சேலையூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி இது குறித்து அயனாவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சந்திரசேகரனின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்திரசேகரன் கைப்பட எழுதிய 6 பக்க கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள்.
அந்த கடிதத்தில் ‘சேலையூரைச் சேர்ந்த நிலத்தரகர்களான சரவணன் மற்றும் கணேசன் இருவரும் சின்ன காஞ்சீபுரத்தில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.52 லட்சம் பெற்றனர். ஆனால் கூறியபடி காஞ்சீபுரத்தில் நிலத்தை வாங்கி தராமல் ஏமாற்றிவிட்டனர். பணத்தை திருப்பிக் கேட்டபோது அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் இப்படி மோசடியாகிவிட்டதை எண்ணி மன வேதனை அடைந்தேன். எனவே இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்கிறேன்’ என்பது உள்ளிட்ட உருக்கமான வார்த்தைகள் எழுதப்பட்டு இருந்தது.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணன் மற்றும் கணேசனை வலைவீசி தேடி வருகின்றனர். மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவரும் அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.நிலத்தரகர்கள் ரூ.52 லட்சம் மோசடி செய்ததால்

Related Tags :
Next Story