காணும் பொங்கல் மாமல்லபுரம், பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள்
காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரம், பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மாமல்லபுரம்,
பொங்கல் பண்டிகையின் 3-ம் நாளான நேற்று காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்தனர். இதனால் மாமல்லபுரம் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மனித தலைகளே காணப்பட்டது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர்.
கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை கல், கலங்கரை விளக்கம் போன்ற இடங்களில் உள்ள சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். ஐந்துரதம் பகுதியில் சர்வதேச அளவில் பல்வேறு வகையான 40 ஆயிரம் சங்குகள் உள்ள சங்கு அருங்காட்சியகத்தையும் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். பலர் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.-
மேலும் 6 வயது முதல் 60 வயதை தாண்டியவர்களும் கடற்கரை மணலில் உற்சாகமாக நடந்து சென்று பொழுதை கழித்தனர். நேற்று கடலில் குளிக்க போலீசார் தடை விதித்து தடுப்புகள் அமைத்திருந்தனர். தடுப்புகளை தாண்டி கடலில் நின்று பொழுதை கழித்தனர். ஆனால் கடலில் இறங்கி குளிக்க போலீசார் அனுமதிக்கவில்லை. தற்காப்புக்காக நீச்சல் படை வீரர்கள் கடலில் பணி அமர்த்தப்பட்டு இருந்தனர்.
காதல் ஜோடிகள் அதிக அளவில் காணப்பட்டனர். சவுக்கு தோப்பு பகுதிகளில் தஞ்சம் புகுந்த பல காதல் ஜோடிகள் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையான நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேற்கத்திய கலாசாரத்திற்கு மாறிய சில பெண்கள் மது மயக்கத்திலும் காணப்பட்டனர்.
காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட போலீசார் மாமல்லபுரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் போக்குவரத்து போலீசாரும் இணைந்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
பொன்னேரி அருகே உள்ளது பழவேற்காடு கடற்கரை கிராமம். இங்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் டச்சு கல்லறை, பழமை வாய்ந்த சமயேஸ்வரர் கோவில், ஆதிநாராயணபெருமாள் கோவில், சின்னமசூதி, நிழல்கடிகாரம், கலங்கரை விளக்கம், படகுதுறை, பழவேற்காடு ஏரி, ஏரியும் கடலும் கலக்கும் இயற்கை எழிலான முகத்துவாரம், பறவைகள் சரணாலயம் உள்பட பல இயற்கை அழகை ரசிக்கும் இடங்கள் அமைந்திருக்கின்றன. இந்த இடங்களை காண சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். காணும் பொங்கலையொட்டி நேற்று பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சுற்றுலா பயணிகளை கண்காணித்த்தனர்.
அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழா வண்ணம் தடுக்கும் வகையில் பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பழவேற்காடு ஏரியில் படகு சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் பொன்னேரி வருவாய் ஆர்.டி.ஓ. முத்துசாமி, தாசில்தார் சுமதி ஆகியோர் நேரடியாக சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து நிலைமையை கண்காணித்தனர். மீஞ்சூர் ஒன்றியத்தின் சார்பில் ஆணையாளர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் ஆகியோர் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனர்.

Related Tags :
Next Story