சுரண்டை அருகே வயோதிக தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை வறுமை-தீராத நோயால் சோக முடிவு


சுரண்டை அருகே வயோதிக தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை வறுமை-தீராத நோயால் சோக முடிவு
x
தினத்தந்தி 18 Jan 2018 3:00 AM IST (Updated: 18 Jan 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே வறுமை மற்றும் தீராத நோயால் மனமுடைந்த வயோதிக தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

சுரண்டை,

சுரண்டை அருகே வறுமை மற்றும் தீராத நோயால் மனமுடைந்த வயோதிக தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

கூலி தொழிலாளி

சுரண்டை அருகே வீரகேரளம்புதூர் பஞ்சாயத்திலுள்ள ராமாவி கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 70). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பொட்டு அம்மாள் (65). இவர்களுக்கு சிவசங்கர்(38) என்ற மகன் உள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி அவர் தனிக்குடித்தனம் சென்று விட்டார்.

அவர், கேரள மாநிலத்தில் ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி சரஸ்வதி, குழந்தைகள் ஊரில் தனியாக வசித்து வருகின்றனர்.

வறுமை

இந்த நிலையில், தங்களுடைய வீட்டில் வசித்து வந்த அரிகிருஷ்ணன் தம்பதியர், கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தனர். தற்போது இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், வேலைக்கு செல்ல முடியாமல் இருந்தனர். இதனால், வறுமையும் அவர்களை தொற்றிக் கொண்டது.

தற்கொலை

இதனால் மனமுடைந்து காணப்பட்ட இருவரும் நேற்று மாலையில் வீட்டை பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள், வீரகேரளம்புதூர் போலீ்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவேந்தன் மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர்.

வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று, தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு, தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story