சேரன்மாதேவியில் ஓட, ஓட விரட்டி வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை பழிக்குப்பழியாக நடந்ததா? போலீசார் விசாரணை
சேரன்மாதேவியில் ஓட, ஓட விரட்டி வாலிபரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது.
சேரன்மாதேவி,
சேரன்மாதேவியில் ஓட, ஓட விரட்டி வாலிபரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது. பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓட, ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி வடக்கு நான்காம் தெருவை சேர்ந்தவர் கணேசன். அவருடைய மகன் தங்கபாண்டி(வயது 22). இவர் நேற்று இரவு 9 மணி அளவில் சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு வங்கி முன்பு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக கையில் அரிவாள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களுடன் ஒரு மர்ம கும்பல் அங்கு வந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென்று தங்கபாண்டியனை சுற்றி வளைத்தனர். பின்னர் தாங்கள் வைத்து இருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார்கள்.
அந்த கும்பலிடம் இருந்து உயிர் பிழைக்க தங்கபாண்டி அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் அவரை விரட்டிச்சென்று வெட்டினார்கள். இதில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த தங்கபாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
பழிக்குப்பழியாக நடந்ததா?
இந்த கொலை பற்றிய தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் மற்றும் வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். இது குறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட தங்கபாண்டியின் குடும்பத்தினர் அந்த பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், அந்த கொலைக்கு பழிக்குப்பழியாக தங்கபாண்டி கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இருந்தாலும் இது உறுதி செய்யப்படாததால் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று இரவு நடந்த இந்த கொலை சம்பவத்தையொட்டி சேரன்மாதேவியில் திடீர் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது அப்போது அந்த வழியாக சென்ற ஒரு பஸ் மீது கல்வீசப்பட்டது. அங்கு மேலும் அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story