பிறந்த நாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு


பிறந்த நாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2018 10:45 PM GMT (Updated: 2018-01-18T01:17:45+05:30)

பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கரூர்,

எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரூரில் அவரது சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வெங்கமேட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவை தலைவர் காளியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கீதா எம்.எல்.ஏ., நகர செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.சி.கே. ஜெயராஜ், மாணவர் அணி முன்னாள் மாவட்ட செயலாளர் தானேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கினர். கரூர் டவுன், பசுபதிபாளையம், வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் எம்.ஜி.ஆர். சிலை மற்றும் அவரது உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வின் பல்வேறு அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு புன்செய் புகளூர் நகர செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

மேலும் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் சின்னதம்பி, பொருளாளர் சுப்பையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணராயபுரம் பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு பேரூர் கழக செயலாளர் தங்கதுரை தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொகுதி இணை செயலாளர் மதியழகன், முன்னாள் கவுன்சிலர்கள் மாரிமுத்து, சுப்பிரமணி, சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story